உள்ளூர் செய்திகள்

கார் மோதி டிரைவர் பலி

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குபேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பங்களாப்புதூர் போலீசார் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

டி.என்.பாளையம்:

கோபிசெட்டிபாளைய த்தை அடுத்த அக்கரை கொடிவேரி இன்னாசியார் வீதியை சேர்ந்தவர் குபேந்திரன் (42). டிரைவர். சம்பவத்தன்று இரவு குபேந்திரன் சத்தியமங்கலத்தில் இருந்து கொடிவேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

சின்னட்டிபாளையம் அருகே வந்த போது கொடிவேரியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குபேந்திரன் தூக்கி வீசப்பட்டு ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாப்புதூர் போலீசார் குபேந்திரன் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.