ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள போதபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது நண்பர் சதீசுடன் சேர்ந்து அவரது தோட்டத்தில் சுரேஷ் மது அருந்தியுள்ளார். போதையில் சதீஷ் தூங்கி விட்டார். இரவு 8 மணியளவில் சதீஷ் தூங்கி எழுந்து பார்த்தபோது சுரேசை காணவில்லை.
பின்னர் தோட்டம் முழுவதும் தேடி பார்த்தும் சுரேஷ் கிடைக்கவில்லை. ஒருவேளை சுரேஷ் கிணற்றில் தவறி விழுந்திரு க்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி தேடியதில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.