உள்ளூர் செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு

சண்முகம் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு, அக். 19-

ஈரோடு மாவட்டம் சூர ம்பட்டி பாரதிதாசன் தெரு வை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). இவ ரது மனைவி சிந்தாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சண்முகம் கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக முத்தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகம் 2-வது மாடியில் வெளிப்பக்கம் சுவரை பூசுவதற்காக சாரத்தின் சவுக்கு கட்டை மீது நின்று கொண்டிருந்தார்.

அப்போது சண்முகம் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதையடுத்து அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து அவரது மனைவி சிந்தாமணி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT