உள்ளூர் செய்திகள்

ரூ.20 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.விவசாயிகள் 2,158 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,158 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 55 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 75 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

மொத்தம் 904 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 20 ஆயிரத்து 706 ரூபாய்க்கு விற்பனையானது.