உள்ளூர் செய்திகள்

ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.மொத்தம் 5,549 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 27 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

மாலை மலர்

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் மொடக்குறிச்சி, எழுமாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,826 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 31 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 65 காசுக்கும் ஏலம் போனது.

மொத்தம் 5,549 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 27 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.