உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு பதிவு

ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் கடத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அரசூர் ஆற்றுப்பகுதி அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது.

அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரசூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் (64), ஆறுமுகம்(64), சந்திரன் (65), சுந்தரம் (70), அன்பழகன் (58), செல்வன் (53), திருமூர்த்தி (52), குமரேசன் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.1600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.