உள்ளூர் செய்திகள்

சேவல் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்கு

சேவல் சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களிடம் இருந்து ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.

சென்னிமலை 

சென்னிமலை அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அய்யம்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 6 பேர் பணம் மற்றும் சேவல் வைத்து கொண்டு சண்டை நடத்தி கொண்டு இருந்தனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் அவர்கள் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.