உள்ளூர் செய்திகள்

பங்களாபுதூர் போலீஸ் ஏட்டு திடீர் சாவு

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸ் ஏட்டு மாதேஸ்வரனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போலீஸ் ஏட்டு மாதேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மாலை மலர்

பவானி:

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் மாதேஸ்வரன் (54). இவர் குடும்பத்துடன் பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூர் சூரியம்பாளையம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸ் ஏட்டு மாதேஸ்வரனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அல்சர் காரணமாக அவர் ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போலீஸ் ஏட்டு மாதேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக அவர் மனைவி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.