உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து மூதாட்டி பலி

ராமையாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாலை மலர்

ஈரோடு:

கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராமையாள் (80). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மூதாட்டி ராமையாள் மட்டும் ஆடு மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ராமையாள் உறவினர் பிரதீப்குமாருடன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பிரதீப்குமார் வண்டியை ஓட்ட பின்னால் ராமையாள் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். பச்சைமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ராமையாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராமையாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.