உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மதுவிற்றவர் கைது

சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர்.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சத்தியமங்கலம் அடுத்த புதூர் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வன் (43) என்பதும்,

அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர்.