உள்ளூர் செய்திகள்

கோவில் விழாவுக்கு வந்த காய்கறி வியாபாரி மயங்கி விழுந்து சாவு

சண்முகபிரபு திடீரென மயங்கி கீழே விழுந்தார்.பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாலை மலர்

டி.என்.பாளையம்:

கோபி கொளப்பலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதையடுத்து ராஜே ஸ்வரி ஏற்கனவே திருமண மான ஈரோட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி சண்முக பிரபு (45) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு கோபி கொளப்ப லூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜே ஸ்வரி டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள தங்கை வீட்டுக்கு கோவில் திருவிழா விற்காக குடும்பத்துடன் வந்து தங்கினார்.

இந்நிலையியில் டி.என்.பாளையத்தில் ராஜேஸ்வரி யின் தங்கை வீட்டில் நேற்று காலை அவர் மற்றும் அவரது கணவர் சண்முக பிரபு குடும்பத்துடன் வாசலில் அமர்ந்து டீ குடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது சண்முக பிரபுவுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு அந்த பகுதியில் மயங்கி கீழே விழுந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் சண்முக பிரபுவை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முக பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் சண்முகபிரபுவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.