உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாமரத்துபாளை யம் சக்தி நகரை சேர்ந்தவர் தினேஷ் (21). ஆயில் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது மோட்டா ர் சைக்கிளில் தினேஷ் வந்து கொண்டிருந்தார்.

வீரப்பன்ச த்திரம் பகுதியில் வந்து கொ ண்டிருந்தபோது திடீரென சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தினேஷ் படுகாயம் அடை ந்தார்.

பின்னர் அவர் சிகி ச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.