உள்ளூர் செய்திகள்

கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை

சந்திரசேகரன் வீட்டில் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.போலீசார் நடத்திய விசாரணையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்தது.

மாலை மலர்

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூசாரியூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சந்திர சேகரன் தங்கி இருந்த வீட்டில் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரசேகரன் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.