ஈரோடு,
சித்தோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சித்தோடு அடுத்த செங்குந்தபுரம் காந்தி நகரில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். சித்தோடு போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (68), கோவிந்தராஜ் (60), ரஞ்சித் குமார்(33), கோவிந்தன்(40), அபிமன்னன்(34), மணிகண்டன்(32), மூர்த்தி (50), குப்புசாமி (53), கார்த்தி (30) ஆகிய 9 பேர் என தெரிய வந்தது
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டு, பணம் ரூ.2500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.