உள்ளூர் செய்திகள்

64,405 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 2, 213 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 34 ஆயிரத்து 566 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 27 ஆயிரத்து 626 பேரும் என மொத்தம் 64,405 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. மாவட்டத்தில்

1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது. நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 2, 213 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 34 ஆயிரத்து 566 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 27 ஆயிரத்து 626 பேரும் என மொத்தம் 64,405 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.