உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

சீட்டாட்டம் விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

ஈரோடு, 

ஈரோடு அடுத்த சோளங்காபாளையம் பகுதியில் மலையம்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள், கணபதிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்(39), காமராஜபுரத்தை சேர்ந்த பழனிசாமி(43), பி.கே.வலசு பகுதியை சேர்ந்த கோபி(38), கிளாம்பாடியை சேர்ந்த குமார்(50) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,130 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.