உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது

3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 35 மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், அறச்சலூர் போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ரமேஷ் (24), ராமச்சந்திரன் (60), சடையப்பன் (61) ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 35 மதுபான பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT