உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் நிகாந் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் சிவப்பிரகாஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

SCROLL FOR NEXT