ஈரோடு:
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் மேக்கூர் இந்திரா நகர் பகுதியில் பெருந்துறை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த மர்மநபர் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முற்பட்டார்.
இதையடுத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனைக்கு வைத்திருப்பதும், அவரிடம் நடத்திய விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த பூமாணிக்கம் (52) என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பூமாணிக்கத்தை கைது செய்து 40 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், சத்தியமங்கலம் கரட்டூர் சாலையில் கேரளா மாநில லாட்டரி சீட்டு விற்றதாக சத்தி ஜலிகுழி வீதியை சேர்ந்த நாகராஜ்(69) என்பவரை போலீசார் கைது செய்து 24 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.