ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி (27). கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (20). நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வள்ளியை பிரசவத்துக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது கடுக்காம் பாளையம் பகுதி அருகே சென்ற போது வள்ளிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் சக்திவேல் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.
மருத்துவ நிட்புநர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் வள்ளிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். பின்னர் அவர்கள் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.