உள்ளூர் செய்திகள்

காரைக்கால் பாரதியார் சாலையை கடக்க முயன்ற என்ஜினீயர் விபத்தில் பலி

காரைக்கால் பாரதியார் சாலையை கடக்க முயன்ற என்ஜினீயர் விபத்தில் பலியானார்.இவர் நூற்பாலை வேலை விசயமாக காரைக்கால் சென்றார்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நெடுங்காடு தனியார் நூற்பாலையில், எலக்ட்ரிக் என்ஜினியராக வேலை செய்து வந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது49). இவர் அதே பகுதியில், தனியார் நூற்பாலை குடியிருப்பில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் நூற்பாலை வேலை விசயமாக காரைக்கால் சென்றார். காரைக்கால் ரெயில் நிலையம் அருகே பாரதியார் சாலையை கடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்களில் வேகமாக வந்த காரைக்கால் ராஜாத்தி நகரைச்சேர்ந்த கஜனி (26) என்பவர் மோதியது.

இதில், கோபால கிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைகாக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இறந்து போனார். இது குறித்து, கோபாலகிருஷ்ணனின் நண்பர் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கஜனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT