உள்ளூர் செய்திகள்

மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு

சேலம் மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலியானார்.மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கியபோது விபத்து.

சேலம்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தேவியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் சேலம் அம்மாபேட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் லைன் மேன் ஆக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி பணியில் இருந்த போது அம்மாபேட்டை கவுண்டம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏரி பழுதை சரி செய்துவிட்டு கீழே இறங்கினார்.

அப்போது செந்தில்குமார் தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் அடிபட்டு மயங்கிய இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.ர்