கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே படியில் தவறிவிழுந்து குடிநீர் வாரிய ஊழியர் சாவு

குடிநீர் வாரிய ஊழியர் படியில் இருந்து தவறிவிழுந்ததால் தலையில் படுகாயத்துடன் கிடந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே குன்னூர் வள்ளல்நதி கூட்டுகுடிநீர் திட்ட தற்காலிக குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் பெரியசாமி(48). இவருக்கு திருமணமாகவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் வைகையாற்று கிழக்குகரை பகுதியில் உள்ள குடிநீர் வாரிய வளாகத்தில் தண்ணீர் திறந்துவிடும் பணி மேற்கொண்டு வந்தார்.

சம்பவத்தன்று பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் போஜம்மாள் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது படியில் இருந்து தவறிவிழுந்ததால் தலையில் படுகாயத்துடன் கிடந்தார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.