உள்ளூர் செய்திகள்

டிரான்ஸ்பார்மரில் இருந்து கீழே தவறி விழுந்த மின் ஊழியர் சாவு

டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார்.சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மேல்பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் சந்தூர் கூட்ரோடு இ.பி. டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் உயிரிழந்தார்.

இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT