உள்ளூர் செய்திகள்

தூக்க மாத்திரை தின்று முதியவர் தற்கொலை

வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டு உள்ளார்.மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்

மாலை மலர்

குன்னத்தூர் :

குன்னத்தூர் அருகே கணபதி பாளையத்தை சேர்ந்தவர் பாட்டப்பன் (வயது 93). வாழ்க்கையில் வெறுப்படைந்த இவர் கடந்த 12ந் தேதி தூக்க மாத்திரை சாப்பிட்டு உள்ளார். இதனால் பயங்கர வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார்.

பாட்டப்பனை உடனடியாக கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாட்டப்பன் இறந்தார். இது குறித்து குன்னத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.