கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது70) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யம்பெருமாள் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பெருமாள் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.