மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட இ-பைக்குகளை படத்தில் காணலாம் 
உள்ளூர் செய்திகள்

பழனி அருகே மாணவர்களின் இ-பைக் தொழிற்சாலை

பழனி அருகே கிராமப்புற மாணவர்களால் உருவாக்கப்பட்ட இ-பைக் தொழிற்சாலை அனைவரையும் கவர்ந்துள்ளது

மாலை மலர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள அ.கலையம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் கவுதம் மற்றும் ராஜேஸ். பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்களாக இருந்தனர்.

ராஜேஸ் தனது கல்லூரி பருவ காலத்திலேயே  2 விதமான எரிபொருளில் செல்லும் மோட்டார் சைக்கிளை தயாரித்து பாராட்டு பெற்றார். கடந்த 2016ம் ஆண்டு முதல் பழனி அருகில் உள்ள தாழையூத்து பகுதியில் தங்களது புதிய முயற்சியில் களம் இறங்க தொடங்கினர்.

இதனால் பல்வேறு தடைகளை தாண்டி வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் இந்நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்தினர். தற்போது 50க்கும் மேற்பட்டோர் இங்கு நேரடியாகவும், 100க்கும் மேற்பட்டோர் மறை முகமாகவும் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இ-பைக் தயாரிப்பில் பல புதுமைகளை ஏற்படுத்தி வாடிக்கையாளர் விரும்பும் வகையில் தரமானதொரு வாகனத்தை தயாரித்து  வழங்குகின்றனர். பெட்ரோல் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், எலக்ட்ரிக் வாகனங் களுக்கு தகுந்தாற் போல் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கின்றனர்.

இவர்களின் வாகனங்கள் தமிழகத்தை கடந்து பல்வேறு மாநிலங்களிலும் விற்பனையாகி வருகிறது. இதில் மேலும் பல புதுமைகளை புகுத்தி வாகனங்கள்தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என் மாணவர்கள் தெரிவிக் கின்றனர்.

எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு அரசிடம் இருந்து உரிய மானியம் கிடைத்தால் தங்கள் தொழிலில் மேலும் சாதிக்க முடியும் என நம்புகின்றனர்.