உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி டிரைவர் பலி

நெல்லை தாழையூத்து அருகே உள்ள கட்டளையை சேர்ந்தவர் மாயாண்டி.இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் தாழையூத்தில் இருந்து கயத்தாறு சென்றார்.

மாலை மலர்

கயத்தாறு:

நெல்லை தாழையூத்து அருகே உள்ள கட்டளையை சேர்ந்தவர் மாயாண்டி (வயது40). இவர் கயத்தாறு பகுதியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் தாழையூத்தில் இருந்து கயத்தாறு சென்றார்.

அவர் அரசன்குளம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையில் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.