உள்ளூர் செய்திகள்

நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலி

பாளை சீனிவாசநகர் மேம்பாலம் அருகே மாரி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.படுகாயம் அடைந்த மாரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள கீழ வெள்ளமடம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி (வயது 40). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 10-ந்தேதி பாளை சீனிவாசநகர் மேம்பா லம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.