வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது.  
உள்ளூர் செய்திகள்

வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்

மழைக்காலங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு மக்கள் அவதி அடைந்து வந்தனர். மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சீர்காழி:

சீர்காழி 2-வது வார்டில் தாழ்வான பகுதியில மழை க்காலங்களில் குடியிருப்பு களை மழைநீர் சூழ்ந்து குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்து வந்தனர். இதனிடையே மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் ரஹமத்நிஷா முபாரக், நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகர னிடம் கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகர், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறு த்தலின்படி இரணியன் நகர் பகுதியில் வாய்க்கால் ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு தூர் வாரும் பணி தொடங்கியது.

இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழாமல் எளிதில் வடியும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகராட்சி பொறியாளர் குமார், பணி மேற்பா ர்வையாளர் விஜயேந்திரன், நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்நிஷா பாரூக் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT