வேதாரண்யம்:
நாகை மாவட்டம்,வேதாரண்யம் நகராட்சியில் ராஜாளி காடு, குமரன்காடு காந்திநகர் மாரியம்மன் கோவில்தெரு, குட்டாச்சிகாடு உள்ளிட்ட 21 வார்டுகளிலும் வாய்கால்கள் தூர்வாரப்படாததால் மழை காலங்களில் தண்ணீர் வடிவது மிகுந்த சிரமாக இருந்தது.
வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.
நகராட்சி பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சியர் குமரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
தூர்வரும் பணி இன்னும் மூன்று வாரத்தில் முடிவடையும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்தார்.