உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் தி.மு.க இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தொடங்கி வைத்தனர் குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன் உள்பட பலர் பங்கேற்பு

மாலை மலர்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி ஒன்றியம் குனியட்டி கிராமத்தில் இல்லந்தோறும் இளைஞரணி தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடந்தது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார், ஒன்றிய செயலாளர் பீமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில்குன்னியட்டி கிளை செயலாளர் குமார், ஊர் தலைவர் பெள்ளிராஜ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சரத்குமார், ஒன்றிய இளைஞரணி மிதுன், குன்னூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவீன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சந்திப், நகர மாணவரணி துணை அமைப்பாளர்வினோத் குமார், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஸ்ரீதர், தனசக்தி, சாஜு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.