கடலூர்:
தமிழக விளையாட்டுதுறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த பரம ஹம்ச ஆச்சார்யா சாமியாரை கண்டித்து கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமையில் கடலூரில் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . பின்னர் கோஷம் எழுப்பி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ இள. புகழேந்தி முன்னிலை வகித்தார். இதில் மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் , பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகரத் துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, அகஸ்டின் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில் முருகன், கவுன்சிலர்கள்ஆராமுது, சுபாஷிணி ராஜா, கவிதா ரகுராமன், பகுதி துணை செயலாளர்கள் லெனின், கார் வெங்கடேசன், ஜெயசீலன்,இளைஞரணி ஜெயச்சந்திரன்,கோபி, உமாபதி,குப்புராஜ் தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.