தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. உறுப்பினர் சிகிச்சைக்கு நிதிஉதவி

மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் ராமர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். உயிருக்கு போராடி, வறுமை நிலையில் உள்ள அவரது தொண்டரின் குடும்ப சூழ்நிலை கருதி அவரின் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை கோரிக்கையை ஏற்று மருத்துவ செலவுக்காக ரூ.50,000 நிதியை ராமரின் உறவினர்களிடம் வழங்கினார்.

சங்கரன்கோவில்:

அப்போது வக்கீல் தனசேகரன், மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன் கிளைக் கழகப் பிரதிநிதி சவுந்தர் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர். தங்களின் தேவை அறிந்து சிகிச்சை செலவிற்காக நிதி வழங்கிய ராஜா எம்.எல்.ஏ.வுக்கு ராமரின் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

SCROLL FOR NEXT