சென்னை:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கரூர் மாநகராட்சி பகுதி தேர்தலில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக கூட்டணி 24 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் 4 இடங்களில் அந்த கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அதிமுக 2 இடங்களிலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து கரூர் மாநகராட்சி திமுக வசம் ஆகிறது.