பரிசு கோப்பையுடன் மாணவர்கள். 
உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி- சாயர்புரம் போப் பள்ளி மாணவர்களுக்கு கோப்பை

மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் நீதியின் சூரியன் உட்பல பலர் பாராட்டினார்.

சாயர்புரம்:

தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான ஜிம்கானா மற்றும் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 35-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபாரமாக விளையாடி ஜீனியர் பிரிவு மற்றும் சீனியர் பிரிவில் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் நீதியின் சூரியன், உடற்கல்வி இயக்குநர் பெஞ்ஜமின் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் எட்வின் தேவதாஸ் ஆகியோரையும், பள்ளியின் தாளாளர் பிரேம்குமார் ராஜாசிங், பள்ளியின் தலைமை ஆசிரியர் அகஸ்டின் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.