புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லான்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் அருண்குமார் என்ற மாணவர் 19 வயது பிரிவு போட்டியில் முதல் இடத்தை பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும் சஞ்சய் காந்த் என்ற மாணவன் 17 வயதிற்கான சைக்கிள் போட்டியில் 3-வது இடத்தை பிடித்தார். இதை அடுத்து பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் பாலமுருகன், நிர்வாக இயக்குனர் நிர்மலா பாலமுருகன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.