உள்ளூர் செய்திகள்

பீடி கேட்டதில் தகராறு; 2 பேர் மீது வழக்கு

மாரியப்பன் மது குடிப்பதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் மாரியப்பன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செல்வம், சுரேஷ் இருவரும் அவரிடம் பீடி கேட்டுள்ளனர்.

மாலை மலர்

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 49). இவரும், இவரது நண்பர்களான கோமதியாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம், சுரேஷ் ஆகிய 3 பேரும் ஒன்றாக மது அருந்துவதாக கூறப்படு கிறது.

இந்நிலையில் மாரியப்பன் மது குடிப்பதை நிறுத்தி விட்டதாக கூறப்படு கிறது. சம்பவத்தன்று சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் மாரியப்பன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செல்வம், சுரேஷ் இருவரும் அவரிடம் பீடி கேட்டுள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் 2 பேரும், செங்கலை எடுத்து மாரியப்பனை கடுமையாக தாக்கியதால் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.