கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

கோவையில் கணவருடன் தகராறு-பெண் தற்கொலை

25 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (58). இவரது கணவர் தேவராஜன் (62).  கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். 

இந்த நிலையில் கருத்து வேறுபாடை மறந்து சேர்ந்து வாழ இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவன் -மனைவி இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினர். முதலில் நன்றாக சென்று கொண்டிருந்து. சில மாதங்கள் கழித்து மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட தொடங்கியது. ஒருவரையொரு திட்டி கொண்டு பேசமால் இருந்து வந்தனர்.

சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சிவகாமி விரக்தியடைந்து வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு கொண்டார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது மகள் வீட்டின் கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது, சிவகாமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அணி சூர் மாலிக் (வயது 19). இவர் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் தங்கி தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை காதலித்தார். 

இந்த நிலையில் கோவை வந்த பின்னர் அந்தப் பெண்ணிற்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதனால் மனவேதனை அடைந்த அவர் திடீரென அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.