மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் தேர்தல் அதிகாரிகளுடன் வேட்பாளர்கள் வாக்குவாதம்

திண்டுக்கலில் தேர்தல் அதிகாரிகளுடன் வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 48 வார்டுகளிலும் மனுத்தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டது.

இதில் 18வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் குறித்து அதே வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ராஜா என்பவர் தேர்தல் அதிகாரியிடம் கேட்டார்.

அதற்கு உங்களிடம் விவரங்களை சொல்லவேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தனர். அதற்கு சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனுவில் தவறான தகவல்கள் அளித்துள்ளதாக எனக்கு தெரிந்ததால் அதனை கேட்டேன் என்றார்.

இதனால் அதிகாரிகளுக்-கும் வேட்பாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் தி.மு.க. வேட்பாளரின் மனுமீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது வெளியில் வந்த தி.மு.க. உறுப்பினர் தெரிவிக்கையில் என்மீது புகார் தெரிவித்த வேட்பாளர் ஏற்கனவே பல்வேறு கட்சியில் சீட் கேட்டு மனு அளித்தார். அங்கு கிடைக்காததால் தற்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

தேவை யின்றி என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். அதிகாரிகள் விசாரணையில் உண்மை தெரியவரும் என்றார். இச்சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.