உள்ளூர் செய்திகள்

டவுன் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

நெல்லை:

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் தலைமையில் டவுன் தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டவுன் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-க்கு விண்ணப்பித்து காலதாமதத்தை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் விவரம் கேட்கும் போது அலட்சியமாக பதில் சொல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செந்தில், புஷ்பா, சுப்பையா, சண்முகத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT