அலெக்சாண்டர் 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் வாகனம் மோதி செண்ட்ரிங் தொழிலாளி பலி

திண்டுக்கல்லில் வாகனம் மோதியதில் செண்டிரிங் தொழிலாளி பலியானார்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மேட்டுப்பட்டி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆரோக்கிய சாமி மகன் அலெக்சாண்டர் (வயது 29). செண்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இன்று காலை தான் வேலை பார்த்த இடத்தில் சம்பளம் வாங்கி வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பாத்துரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.