பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் சமூக நுகர்வோர் மக்கள் சேவை சங்கம் சார்பில் அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரமதேவி, தலைமை தாங்கினார், முக நுகர்வோர் மக்கள் சேவை சங்க தருமபுரி மாவட்ட தலைவர் ராதா வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தார்.
தருமபுரி மண்டல பதிவாளர் அலுவலகம் உதவியாளர் ஞானசேகரன் மற்றும் சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சக்தி மனோகரன், மாவட்ட தலைவர் கேசவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இதேபோல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை ஆசிரியர் மாதன் தலைமை தாங்கினார். சங்க பொறுப்பாளர்கள் பழனி, மகேஸ்வரி , ராஜேஸ்வரி, சரசு ,விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வி, தங்கம்மாள், செல்வி, சத்யா, கேசவமூர்த்தி, சங்கர்-கணேஷ் - மணிகண்டன் ,சேகர், ராஜேஸ்வரி, ராமச்சந்திரன், உள்பட பல நிர்வாகிகள் கலந்துகொண்டு பள்ளி பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டனர்.