உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் தற்கொலை

தருமபுரியில் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸெப்க்டரின் மகன் தற்கிலை செய்துகொண்டார்.

தருமபுரி:

தருமபுரி இந்திரா நகரை சேர்ந்த  ஓய்வு பெற்ற சிறப்பு சப்& இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன். இவரது மகன் பிரமோத்குமார் (வயது 25). இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அரசு வேலைக்காக பிரமோத்குமார் முயற்சி செய்து வந்ததாக கூறப்படு கிறது. ஆனால் இதில் அவருக்கு தோல்வியே ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவரது குடும்பத் தினர் கோவைக்கு சென்றிருந் தனர். 

இதனால் வீட்டில் யாரும் இல்லாததால் பிரமோத் குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தருமபுரி டவுன் போலீசில் புகார் செய்யப் பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு வேலைக்காக ஓய்வு பெற்ற சிறப்பு சப்& இன்ஸ் பெக்டரின் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. 

SCROLL FOR NEXT