உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

தருமபுரி அருகே குழந்தை திருமணத்தை சைல்டு லைன் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி அருகே நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவருக்கும் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவிக்கு திருமணம் இடத்தில இருதரப்பு பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதாக சைடு லைனுக்கு புகார் வந்தது. 

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் சென்று குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர். மேலும் இருதரப்பு பெற்றோருக்கும் அறிவுரைகளை கூறிய அதிகாரிகள் அந்த மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள குறிஞ்சிநகர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் குழந்தை திருமணம் நடத்த ஏற்பாடு செய்த மாணவி மற்றும் வாலிபரின் பெற்றோரிடம் அதியமான்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.