உள்ளூர் செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

மாலை மலர்

பாலக்கோடு, -

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் டாக்டர் . செண்பகவள்ளி முன்னிலை வகித்தார்.

இதில் பேசிய மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி  சாலை விதிமுறைகளை எவ்வாறு பின் பற்றுவது மற்றும் வாகனத்தை இயக்கும் நபர்கள் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய வேண்டும் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் மீறுபவர்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சிவானந்தம் நன்றி கூறினார்.