தேங்கி கிடக்கும் கழிவுநீரை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் தேங்குவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

கடத்தூர் பேரூராட்சி பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் ஏற்பாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடத்தூர்:

தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் உள்ளது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் கடத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து புது ரெட்டியூர் செல்லும் ரோட்டில் பல மாதமாக கழிப்பிட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்து வெளியேரும் கழிவு நீர் செல்லாமல் அங்கு தேங்கி உள்ளது.

இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசு பெருக்கமும் அதிகரித்து வருகின்றது. இதனால் அந்த பகுதியில் கடைகள் வைத்துள்ளவர்கள், குடியிருப்போர், அந்த வழியாக தங்களின் கிராமங்களுக்கு செல்லும் ஆயிரக்கனக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.