உள்ளூர் செய்திகள்

மருந்தடிக்கும் கூலித்தொழிலாளி தற்கொலை

தருமபுரி அருகே மருந்தடிக்கும் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கெட்டுப்பட்டி அருகே அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50).  இவர் பயிர்களுக்கு மருந்து அடிக்கும் கூலித் தொழில் செய்து வருகிறார்.

 இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.  இன்று குடிப்பதற்கு வீட்டில் பணம் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து இன்று காலை மருந்து அடிக்க வைத்திருந்த விஷத்தை அருந்தி மயங்கி விழுந்துள்ளார் .

உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக  தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் பின்னர்  முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.