தருமபுரி:
தருமபுரி அடுத்த ராஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் நீதி (வயது 50). விவசாயியான இவர் கட்டிட கம்பி கட்டும் வேலையும் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தனது குத்தகை நிலத்தில் உள்ள மரத்தில், கயிற்றால் தூக்குப்போட்டு நீதி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.