உள்ளூர் செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

மாலை மலர்

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கீழ்தவளுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் அருண்குமார் (வயது 17). இவர் பிளஸ்&2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாலிபர் அருண்குமார் புறப்பட்டு சென்றார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரம கடந்த நிலையில் திடீரென அங்கு நின்ற வைக்கோல் பாரம் ஏற்றிய லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அருண்குமார் பலத்த காயம் அடைந்தார்.

உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அருண்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.